மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை: நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - சவீதா பல்கலைக்கழகம் அறிவிப்பு - தி இந்து
http://tamil.thehindu.com/tamilnadu/
4 th page
http://tamil.thehindu.com/tamilnadu/
4 th page
சவீதா பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: சவீதா பல் கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு எஜுகேஷனல் அசெஸ்மென்ட் அண்ட் ரேட்டிங் (இ.ஆர்.ஏ.) அமைப்பின் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படை யில் நடைபெற உள்ளது.
பிளஸ்-2 மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதலாம். இதற்கு ஆன்லைனில் (www.erafoundationindia.org) விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை செலான் மூலமாக மார்ச் 25-ம் தேதிக்குள்ளும், நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக ஏப்ரல் 4-ம்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச்சீட்டு ஏப்ரல் 20-ம்தேதி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர் உள்பட நாடு முழுவதும் 70 மையங்களில் ஆன்லைனில் நடத்தப்பட்டு மதிப்பெண் விவ ரம் 29-ம் தேதி வெளியிடப்படும்.
No comments:
Post a Comment